எண்களை நண்பனாக்கிக்கொள்ளுங்கள் 2

             ஒருவரின் பிறந்த தேதி 4-12-1982 இவரின் பிறவி எண் 4 ;  விதி எண் 9 வழிநடத்தும் எண்கள் 3,2 இவருடைய பெயர் எண் 1,5,6, போன்ற எண்களில் அமைத்துக் கொண்டால் நல்வாழ்வு அமையும். குறிப்பாக 1,5 போன்ற எண்களில் பெயரெண் அமைத்தால் மிகச்சிறப்பு. ஏனெனில் வழிநடத்தும் எண்ணில் 3 இருக்கிறது. இந்த 3, பெயரெண் 6க்கு பகை எண் எனவே 23 வயதிலிருந்து 31 வயது வரை சிலப்பிரச்சினைகளைத் தரும். எனவே ஒருவருக்கு பெயர் எண், விதியெண் ஆகியவற்றிற்கேற்ப அமைப்பதோடு அல்லாமல் வழி நடத்தும் எண்களையும் அனுசரித்தே பெயரெண் அமைக்க வேண்டும்.
              அடுத்ததாக ஒருவருக்கு பெயர் செட்பண்ணும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது இனிசியல். இந்த இனிசியலுக்கு நட்பான எழுத்தில் ஆரம்பிக்குமாறு பெயரின் முதலெழுத்து அமைய வேண்டும். ஏனெனில் ஒருவரின் இனிசியல் மற்றும் பெயரின் முதல் எழுத்து மற்றும் பெயரின் கடைசி எழுத்து ஆகிய மூன்று எழுத்துக்களும் ஒருவரின் வாழ்க்கையின் போக்கை நிர்மாணிப்பதில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே இந்த மூன்று எழுத்துக்களையும் மிகமுக்கியமாக கவனித்துக் பெயர் செட்பண்ண வேண்டும். இனிசியலும், பெயரின் முதலெழுத்தும் சேர்ந்துதான் அந்த நபரின் குணநலன்கள், உடல் தோற்றம் போன்றவைற்றை நிர் மாணிக்கும் எனவே இந்த எழுத்துக்கள் ஒன்றுக்கொன்றுக் நட்பாக அமைய வேண்டும். கிரங்களுக்கிடையில் நட்பு பகை உள்ளது போன்று, எழுத்துக்களுக்கிடையிலும் நட்பு, பகை, சமம் போன்றவை உள்ளது.
              குறிப்பாக சனி, ராகு, கேது போன்றவை பாவக்கிரகங்கள் ஆகும் கலியுகத்தில் இந்த மூன்று கிரகங்களும் அதிக சக்தி வாய்ந்தவை. அதுபோன்ற இந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட எழுத்துக்களான : D,H,M,O,Q,R,S போன்ற எழுத்துக்கள் மிக வலிமை நிறைந்தவை. இவைகளை பெயரில் நல்ல எழுத்துக்களுடன் இணைக்கும் போது பல நற்பலன்களைக் கொடுக்கும். மாறாக இவைகள் ஒன்று உடன் ஒன்று இணைந்து பெயரில் வரும் போது பல சோதனைகளைக் கொடுக்கும். எந்த எழுத்து எந்த எழுத்துடன் சேர்ந்தால் நன்மை செய்யும் என பின்னர் காண்போம்..........................