நியூமராலஜி என்பது ஜாதகப் பலன்களின் சுருக்கம் . ஜாதகப் பலன்கள் விரிவாக விளம்புவதை எண்கள் சூட்சமமாக பல விசயங்களை சுருக்கி எடுத்துரைக்கும். ஒருவரின் பிறந்த தேதியைக் கொண்டே அவரின் குணநலன்கள், தோற்றம், படிப்பு, வாழ்க்கை நிலை பொருளாதார அந்தஸ்த்து, நோய்களின் நிலை மற்ற எல்லா விவரங்களையும் சொல்லி விடலாம்.
ஒருவரின் பிறவி எண்ணைக் கொண்டு அவரது குணநலன்கள், தோற்றம், பழகும்விதம், அறிவுக் கூர்மை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். அவரின் விதிஎண்ணை வைத்து அவரின் வாழ்கை அமைப்பு, ஆன்மீக நிலை, அந்தஸ்த்து, இறுதி முடிவு போன்ற விவரங்களை அறியலாம்.
வழி நடத்தும் எண்களாக மாத எண், வருட எண் செயல்படும் பெரும் பான்மையான நியூமராலஜிஸ்டுகள் இந்த வழி நடத்தும். மாத வருட எண்களை கணக்கில் எடுக்க மாட்டார்கள் கண்டிப்பாக இந்த எண்களையும் மனதில் கொண்டு பலன்கள் சொல்லும் போதுதான் சரியான பலன்களை சொல்ல முடியும். அடுத்து பெயரெண் இதுவும் பிறந்த தேதிக்கேற்றபடி சரியாக அமைந்தால் வாழ்க்கையின் போக்கு தெளிந்த நீரோடை போல் இருக்கும் இல்லையென்றால் வாழ்கை காட்டாறுபோல் கட்டுப்பாடில்லாமல் போகும்.
எனவே பெயரெண், பிறந்த தேதிக்கேற்றபடி மிக்க கவனமான முறையில் அமைத்துக் கொள்ளவேண்டும். பெயரில் ஒவ்வொரு எழுத்தும் உங்கள் வாழ்க்கையை நிர்மாணிக்கும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு எழுத்தை சேர்ப்பதாய் இருந்தாலும் மிக மிக கவனமாய் அதை செய்யவேண்டும். ஒரு பெயர் நியூமராலஜி, நேமாலஜி, ப்ரனாலஜிப் படி நன்றாக இருந்தால்தான் அவர்களின் வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக அமையும்.
நம் பெயரில் வரும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பவர் உண்டு. மந்திர சக்தி வாய்ந்த இந்த எழுத்துக்களைப்பற்றி நான் வரும் அத்தியாயங்களில் எழுதுவேன். இப்பொழுது ஒருவரின் பிறவி எண், விதி எண், வழிநடத்தும் எண்கள், பெயரெண் எப்படி கண்டுபிடிப்பது எனக்காண்போம்.
உதாரணமாக :
பெயர் : K.ARAVINDH
பிறந்த தேதி : 22-06-1985
எப்போதும் பிறவி, விதிஎண்களை காண ஒற்றை எண்களாக மாற்றிக் கொள்ளவேண்டும். இப்பொழுது இவருடைய பிறந்த தேதி 22 அல்லவா ? 2+2=4 இவருடைய பிறவி எண் 4 ஆகும்.
வழி நடத்தும் எண்கள் என்று சொன்னேனே ! அது மாத எண்ணும், வருட எண்ணும் ஆகும். இப்போது இவரின் வழிநடத்தும் எண்கள் 06=6; வருட எண் 1985; 1+9+8+5=23 வருகிறது இதையும் ஒற்றை எண் ஆக்கிக் கொள்ளவேண்டும் Z+3=5 எனவே இவரின் வழி நடத்து எண்கள் 6 மற்றும் 5 ஆகும். கண்டிப்பாக இந்த எண்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனி்ல் நமது மத்திம வயது காலத்தை நிர்மானிப்பதில் இந்த எண்களுக்கு அதிக பங்குஉண்டு.
இப்போது விதி எண் கண்டு பிடிக்கும் முறை பிறந்ததேதியின் எல்லா எண்களையும் கூட்டி ஒற்றை எண்ணாக மாற்றினால் விதியெண் கிடைத்துவிடும்.
2+2+0+6+1+9+8+5=33 இந்த எண்னைணையும் ஒற்றை இலக்க மாக்கவேண்டும் 3+3=6 இவரின் விதி எண் 6 ஆகும் எனவே இந்த அரவிந்த் எனப் பெயர் கொண்டவரின் பிறவிஎண்-4, வழி நடத்து எண்கள் 6,5, விதி எண் 6 ஆகும். இப்போது பெயரெண்னுக்கு வருவோம்.
K.ARAVINDH
2 12161545=27=2+7=9
இவரின் பெயரெண் 27 வருகிறது. இதுதான் ஒருவரின் பிறவி எண், விதி எண், வழி நடத்தும் எண்கள், பெயரெண் கண்டு பிடிக்கும் முறை சிலர் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இப்போது ஒரே பிறந்ததேதி; வெவ்வேறு பெயர்கள் கொண்டவர்களின் வாழ்க்கை நிலை எப்படி வேறுபடுகிறது என உதாரணங்களுடன் சொல்லப்போகிறன்.பிறந்த தேதி : 21/07/1983
பிறவி எண் : 3
விதி எண் : 4
வழி நடத்து எண்கள் - 7 மற்றும் 3
இந்த தேதியில் பிறந்த, வேறுபட்ட பெயர்கள் கொண்டவர்களின் வாழ்க்கை அமைப்பு வேறுபாடுவதைக் காண்போம்.
V.ASWINI = 23
இந்த நபருக்கு பிறந்த தேதிக்கேற்றபடி பெயர் அமைந்துவிட்டது பெயரும் ப்ரனாலஜிப்படி மிக அழகாக உள்ளது. எனவே இந்தப் பெண் நல்ல குடும்பத்தில் பிறந்த அடிப்படைத் தேவைகள் சரிவரப்பூர்த்தியாக, நல்ல படிப்பு படிப்பாள். வேலையும் எதிர்பார்த்த படி அமையும், குடும்பமும் மகிழ்ச்சியாய் இருக்கும். தேவையான வளங்கள் பெற்று நல்வாழ்வு அமையும்.இப்போது இதே பிறந்த தேதி, இதே பெயரெண் கொண்ட வேறு ஒருவரின் பெயர்வேறாக இருப்பதால் அவரின் வாழ்வு மாறுபடுவதை காணலாம்.
R.MAGESH=23
இப்போது இவரின் பெயரை ஆராயும் போது பிறந்த தேதி நன்றாக உள்ளது. பெயரெண்ணும் நல்ல எண்தான் ஆனால் பெயர் ப்ரனாலஜிப்படி நன்றாக அமையாததால் இவரின் வாழ்க்கை கொஞ்சம் கடினம் நிறைந்ததாய் இருக்கும். இவர் பிறந்த பிறகு குடும்பத்தில் வருமை காட்டும். குடும்பத்தில் இவரை அதிகம் படிக்க வைக்க முடியாத சூழ்நிலை நிலவும். அடுத்தவரின் உதவியல் படிப்பார். வேலை கிடைப்பதில் மிகுந்த சிரமம் காட்டும். நண்பர்கள் உதவியால் வேலை அமையும். 24வயதுக்குப்பிறகு கொஞ்சம் நல்ல காலம் தெரிய ஆரம்பிக்கும் திருமணம் செய்து குழந்தைகள் பிறக்கும், 31 வயது வரை கொஞ்சம் நற்பலன்களே நடக்கும், 32 வயதிலிருந்து கஸ்டகாலம் தொடங்கும். உடல் பாதிப்பு, நரம்பு சமந்தப்பட்ட நோய்கள், குடும்பத்தில் பணப்பிரச்சிணைகள் போன்றவை நிச்சயமாக இருக்கும். இதுபோன்ற பெரும்பாலும் கெடு பலன்களை இந்த தேதியில் பிறந்த இவருக்கு இந்த பெயர் கொடுக்கும். எனவே இந்த தேதியில் பிறந்தவருக்கு நல்ல ப்ரனாலஜிப்படி போது இவருக்கு நல்ல பலன்கள் வாழ்க்கையில் நடக்கும்.