நம்வாழ்வு சிறப்பாக இருக்கும் இன்னொரு முக்கியமான விசயம் அன்றய தேதியின் கூட்டு எண் 4,5,8 ஆக வந்தால் அன்றைக்கு நிச்சயம் திருமணம் செய்ய வேண்டாம். நன்மை செய்யாது. இது எல்லா எண் காரர்களுக்கும் பொருந்தும்.
திருமண பந்தம் என்பது நீண்டகால வாழ்க்கை என்பதால் துணைவியின் விதியெண்னைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அது போல் திருமணத் தேதியின் கூட்டு எண்ணைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். கீழே காணும் அட்டவனையும் விதியெண்ணைத்தான் குறிப்பிடுகிறது.
திருமண வாழ்வு தித்திக்க
ஒவ்வொருவருக்கும் தமக்கு வரவிருக்கும் துணை எப்படியிருக்க வேண்டும் ? என்ற கனவு இருக்கும் கனவுப்படியே ஏற்ற துணை அமைந்து விட்டால் வாழ்வே சொர்க்கம் தான். இப்போதெல்லாம் திருமண மண்டபங்கள்தான் நம் முகூர்த்த நாட்களை நிர்ணயிக்கின்றன. திருமண மண்டபங்களில் தேதி கிடைக்கும் நாட்களில்தான் நாம் திருமணம் நடத்த வேண்டியுள்ளது.
ஆனால் நம் பிறந்த தேதிக்கேற்ற முகூர்த்த நன்னாளில் திருமணம் செய்தால்தான் நம் வாழ்வு சிறக்கும். நாம் செய்கின்ற இன்னொரு தவறும் இருக்கிறது. காலண்டரில் முகூர்த்த நாள் என இருக்கும் நாட்களில் முண்டியடித்துக் கொண்டு திருமண மண்டப தேதிகளை ஆக்கிரமிப்பதும் அதில் ஒன்று காலண்டரில் நீங்கள் பார்க்கும் முகூர்த்த நாள் பொதுவான நன்னாள் ஆகும். அதில் சிறிதும் தவறில்லை ஆனால் அதே நாளில் திருமணம் முடிக்கும் தம்பதிகளில் அநேகர் பிரச்சணைகளை சந்திக்கிறார்களே ! கவனித்தீர்களா ? ஏனெனில் அந்த நாள் அவர்களின் பிறந்த நாளுக்கு பகையான நாளாயிருக்கிறது.
எனவே நிச்சயமாக நம் பிறந்த தேதிக்கு நட்பான நன்மை தரும் நன்னாளில் திருமணம் செய்தால்தான்
ஒரு நபரின் விதியெண் நன்மைதரும் திருமணத்தேதியின் கூட்டு எண்
1 1,3,6,9
2 1,3
3 1,3,9
4 1,3,6
5 1,3,9
6 1,6,9
7 6
8 1,6
9 1,3,6,9
நபரின் விதியெண் நல்வாழ்வை நல்கும் துணையின் விதயெண்
1 4,8,2,3,5,6,9,1
2 1,7,2,5,3,4
3 9,3,1,5,2,4
4 1,8,6,5,2,4
5 9,5,6,1,3
6 6,9,1,5,4,8
7 2,5,6
8 4,1,8,6,5,2
9 3,6,9,5,1
மேலே உள்ள அட்டவணையில் நன்மை செய்யும் எண்களின் படி எண்கள் அணிவகுத்துள்ளன.
விதியெண் 1 உடையவர்கள் விதியெண் 7 உடையவரை திருமணம் செய்யக்கூடாது.
விதியெண் 2 உடையவர்கள் விதியெண் 9 உடையவரை மணம் செய்யக்கூடாது.
விதியெண் 3 உடையவர்கள் விதியெண் 6,7 உடையவரை திருமணம் செய்ய வேண்டாம். குழந்தை பாக்கியத்தில் தடைகள், ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றும்.
விதியெண் 4 உடையவர்கள் 7 விதியெண் காரரை திருமணம் செய்தால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இவ்வாறு விதி வசத்தால் அமைந்துவிட்டால் காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்து கொள்ளவும்.
விதியெண் 5 காரர்கள் 5 விதியெண்ணுடையவரை திருமணம் செய்யதால் வாழ்கை வளமாக இருக்கும். ஆனால் குழந்தைபிறப்பது கஸ்டம் ஆகும். அதே போல் தான் 7ம் எண் விதியெண்ணாகப் பெற்றவரை திருமணம் செய்தாலும் குழந்தை பிறக்கமால் போக வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாக இந்த எண்காரர்கள் திருமணம் செய்ய வேண்டாம். 5ம் எண்காரர்களுக்கு ஜாதகப்படி பார்த்தாலும் புத்திர தோசம் இருக்கும். எனவே இவர்கள் விதயெண் 2,3,6 உடையவரை திருமணம் செய்தால் புத்திரபாக்கியம் உண்டு என்றாலும் திருமணத்தேதியின் கூட்டு எண் 5,7,8 ஆக வராமல் பார்த்துக் கொள்ளவும்.
விதியெண் 6 உடையவர்கள் விதியெண் 3 உடையவரை திருமணம் செய்யவேண்டாம். இவர்கள் விதியெண் 2 உடையவரை திருமணம் செய்தால் பெண்குழந்தைகள் அதிகம் பிறப்பர்.
விதியெண் 7 உடையவர்கள் திருமணம் செய்யும் போது மிகக் கவனமாக ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது நல்லது. இவர்களது ஜாதகத்தில் திருமண தோசம் இருக்கும் வரன்கள் தட்டிதட்டிப் போகும். துணையின் விதியெண் 2,6 ஆக இருந்தால் நலம் 5ம் எண்காரரும் நல்ல துணைதான் ஆனாலும் குழந்தைக்கு தடைகள் உண்டு. திருமணத்தேதியின் கூட்டு எண் கண்டிப்பாக 6 ஆக வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
விதியெண் 8 காரர்கள் 7ம் எண் காரர்களை தவிர்த்துவிடலாம் விதியெண் 8 எண் காரர்களுக்கு 4ம் எண் காரர்கள் மிகச்சரியான துணையாகும். இருவரும் மிக அன்னியோனியமாக இருப்பார்கள் குடும்பத்தில் செலவுகள் அதிகம் இருக்கும் விதியெண் 1,6 காரர்களை இவர்கள் மணந்தால் செல்வ நிலையில் உயர்வு உண்டாகும் விதியெண் 9 காரர்கள் 2ம் எண்ணை விதியெண்ணாகப் பெற்றவரை மணக்க வேண்டாம் ஒற்றுமை இருக்காது. கிரக தோசத்தால் குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும். விதியெண் 3 உடையவர்கள் இவர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பார்கள்.
பொருத்தமில்லாத தேதியில் திருமணம் நடந்திருந்தாலும், பொருந்தாத எண் உடைய துணையை மணந்திருந்தாலும் நிச்சியமாக ஏதாவது பிரச்சினை இருக்கும். இதற்கு பரிகாரமாக, உங்களுக்கு பொருத்தமான நல்ல தேதியில் மறு திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் வாழ்வு சிறக்கும். மறு திருமணம் என்றால் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது அல்ல ! அதே மனைவியை முறைப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டநேரத்தில் திருமணம் செய்வது. இவ்வாறு செய்வது கொள்வதால் பிரச்சினைகள் நிச்சயம் இறைவன் அருளால் நீங்கும். நிச்சயம் இவ்வாறு பரிகாரம் செய்து நிவாரணம் அடையுங்கள். குறிப்பாக, குழந்தையில்லா தம்பதியினர்ன் திருமணத்தேதி நிச்சயமாக அவர்களின் பிறந்த தேதிக்கு பொருந்தாத எண்ணாகவே இருக்கும். இவர்கள் நிச்சயம் Re-Marriage செய்து பயனடையுங்கள்.